வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்று
வானம் புமி தந்த தேவன் வாக்களித்தாரே!
வணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்
உண்மையோடு தேவனைத் துதித்து பாடுவோம்
1.
வேரில் துளிர்க்கும் இளம் தளிர் போல
தேவ ஜனம் நாம் எழும்பிடுவோமே!
வேர்கள் ஆழம் செல்ல மேலே வளர்ந்து
நாமும் கனி கொடுக்கும் மரங்கள் போலவே!
அணியணியாய் தேவ சேனை பெருகி தேசம் எங்கிலும்
பணிபுரியும் தேவ இராஜ்ஜியம் விரைந்து பெருகிடும்! – வைராக்கிய
2.
கோலியாத்தைப் போல் எதிரிகள் சூழ்ந்து
வந்து நின்று நிந்தனைகள் செய்தபோதிலும்
ஆமானைப்போல் சதிகள் செய்து
ஊழியத்தை வேரறுக்க முனைந்தபோதிலும்
பதிலளிக்கும் தேவன் முன்னே முழந்தாளிட்டு வேண்டுவோம்!
எதிரிகளும் ஆண்டவரைப் பணிவார் காணுவோம்!- வைராக்கிய
3.
திறந்தவாசல் இன்று உண்டு
தேவையுள்ள ஆத்துமாக்கள் எங்கிலும் உண்டு
திறப்பின் முன் நின்று சிலுவை நோக்கி
தேசத்தைத் திருப்புவோம் சுதந்தரிப்போமே
கிரயமின்றி பாவமீட்பை இந்தியர்கள் பெற்றிட
கிரயம் செலுத்தும் வரராக எழும்புவோம் நாமே- வைராக்கிய
vairakkiya vanjsaiyodu seyalpaduven endru
vanam bumi dhanthdha thevan vakkaliththare!
vanana thikil kalakkam sorvu neengki yavarum
unmaiyodu thevanaith thuthiththu paduvom
1.
veril thulirkkum ilam dhalir pola
theva janam nam ezhumbiduvome!
verkal aazham sella mele valarnththu
namum kani kodukkum marangkal polave!
aniyaniyay theva senai beruki thecham engkilum
panipuriyum theva irajajeyam virainththu berukidum! – vairakkiya
2.
koliyaththaib pol ethirikal suzhnththu
vanththu nindru ninthdhanaikal seydhapothilum
aamanaippol sathikal seythu
uuzhiyaththai verarukka munainthdhapothilum
pathilalikkum thevan munne muzhanththaliddu venduveாm!
ethirikalum aandavaraib panivar kanuvom!- vairakkiya
3.
thiranthdhavasal indru undu
thevaiyulla aaththumakkal engkilum undu
thirappin mun nindru siluvai nokki
thechathaith thiruppuvom sudhanthdharippome
kirayaminri bavamadbai inththiyarkal berrita
kirayam seluththum vararaka ezhumbuvom name- vairakkiya